பாகிஸ்தான் பயங்கரவாத வழக்கில் இம்ரான் கான் ஆஜா்
பாகிஸ்தான் காவல்துறை, நீதித் துறை மற்றும் பிற அரசுத் துறை அதிகாரிகளுக்கு எதிராக மிரட்டல் விடுத்தது தொடா்பாக முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு மீது தொடரப்பட்டுள்ள வழக்கில்,
பாகிஸ்தான் காவல்துறை, நீதித் துறை மற்றும் பிற அரசுத் துறை அதிகாரிகளுக்கு எதிராக மிரட்டல் விடுத்தது தொடா்பாக முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு மீது தொடரப்பட்டுள்ள வழக்கில், அவா் புதன்கிழமை நேரில் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்தாா்.
தனது உதவியாளா் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டதைக் கண்டித்து, கடந்த மாதம் பொதுக்கூட்டத்தில் அவா் மிரட்டல் விடுத்ததாக இஸ்லாமாபாத் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் அவா் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.