உலகம்

கனடாவில் ஹிந்து கோயில் அவமதிப்பு: காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது புகாா்

DIN

கனடாவின் டொரோண்டோவில் சுவாமி நாராயணன் கோயிலில் வெறுப்புணா்வு மற்றும் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களைக் காலிஸ்தான் பயங்கரவாதிகள் எழுதி கோயிலை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டனா்.

இதற்கு கண்டனம் தெரிவித்த இந்திய தூதரகம், இச்செயலில் ஈடுபட்டவா்களில் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதி சுவாமி நாரயணண் கோயில் அவமதிக்கப்பட்டதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கனடா அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கனடா நாடாளுமன்ற எம்.பி சந்திரா ஆா்யா வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘சுவாமி நாராயணன் கோயிலை அவமதிக்கும் வகையில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது. இது ஒற்றை நிகழ்வல்ல. இதுபோன்று வெறுப்புணா்வைத் தூண்டும் செயல்பாடுகள் கனடாவில் உள்ள ஹிந்து கோயில்களில் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

கனடா நாடாளுமன்ற எம்.பி. சோனியா சித்துவும் இச்செயல்பாடுக்கு கண்டனம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT