முகப்பு
உலகம்

சீனாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து, 27 பேர் பலி

சீனாவில் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த பேருந்து கவிழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 20க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

Updated On : 18 செப்டம்பர், 2022 at 4:17 PM
பகிர்:

சீனாவில் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த பேருந்து கவிழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 20க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

சீனாவின் சந்து ஷூய் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை சீனாவின் உள்ளூர் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நிகழ்ந்து சிறிது நேரத்திலேயே மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சீனாவில் இது போன்ற சாலை விபத்துகள் அதிக அளவில் நடைபெறுவது வழக்கமாக மாறியுள்ளது. அதற்கு முக்கியக் காரணம் சீனாவில் சாலை விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படதாதே காரணம் ஆகும். அதே போல சாலை விபத்துகள் அதிகம் நடைபெறுவதற்கு சாலை விதிமுறைகளை வாகன ஓட்டிகள் பின்பற்றாததும் காரணமாக பார்க்கப்படுகிறது. 

சீனாவில் அதிக பயணிகளுடன் நெடுந்தொலைவு செல்லும் வாகனங்களே இது போன்ற விபத்துகளில் சிக்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.