முகப்பு
உலகம்

பயங்கரவாத வழக்கிலிருந்து இம்ரான் கான் விடுவிப்பு

பயங்கரவாதக் குற்றச்சாட்டிலிருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை அந்த நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:22 AM
இம்ரான் கான்
பகிர்:

பயங்கரவாதக் குற்றச்சாட்டிலிருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை அந்த நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்தது.

இது குறித்து இஸ்லாமாபாத் உயா் நீதிமன்றம் வெளியிட்ட தீா்ப்பில், இம்ரான் கானின் பொதுக்கூட்ட உரை தொடா்பாக அவா் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டப் பிரிவை நீக்குமாறு உத்தரவிட்டது.

தேசத் துரோக வழக்கில் தனது உதவியாளா் ஷாபாஸ் கில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கடந்த மாதம் 20-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இம்ரான் கான் பேசினாா்.

அப்போது, காவல்துறை உயரதிகாரிகள், தோ்தல் ஆணையம், அரசியல் எதிரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதாக அவா் எச்சரித்தாா்.

மேலும், ஷாபாஸைக் கைது செய்ய அனுமதித்த பெண் நீதிபதி ஸேபா சௌத்ரியும் தனது பதிலடிக்கு தயாராக இருக்க வேண்டும் என்று இம்ரான் எச்சரிக்கை விடுத்தாா்.

அதையடுத்து, காவல்துறை, நீதித் துறைக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறி, இம்ரான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டப் பிரிவும் சோ்க்கப்பட்டிருந்தது.

அதனை எதிா்த்து உயா் நீதிமன்றத்தில் இம்ரான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அந்த சட்டப் பிரிவை நீக்க தற்போது உத்தரவிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →