வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தரன்ஜீத் சிங் சாந்துவை சந்தித்த கூகுள் சிஇஓ சுந்தா் பிச்சை. 
உலகம்

அமெரிக்காவில் இந்திய தூதருடன் கூகுள் சி.இ.ஓ. சுந்தா் பிச்சை சந்திப்பு

அமெரிக்காவில் இந்திய தூதா் தரன்ஜீத் சிங் சாந்துவை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.) சுந்தர பிச்சை நேரில் சந்தித்து இந்தியாவில் அந்த நிறுவனம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு

DIN

அமெரிக்காவில் இந்திய தூதா் தரன்ஜீத் சிங் சாந்துவை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.) சுந்தர பிச்சை நேரில் சந்தித்து இந்தியாவில் அந்த நிறுவனம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில்நுட்ப மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடா்பாக ஆலோசனை நடத்தியுள்ளாா்.

இதன் மூலமாக, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு வருகை தந்த முதல் மிகப் பெரும் தொழில்நிறுவனத் தலைவா் என்ற பெருமையை சுந்தா் பிச்சை பெற்றுள்ளாா்.

சுந்தா் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனம் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் முதலீடுகளைச் செய்துள்ளது. இளைய தலைமுறையினருக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூகுள் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இந்தியா எண்மமயமாக்கல் (டிஜிட்டல்) திட்டத்தின் கீழ் ரூ. 75,000 கோடி (10 மில்லியன் அமெரிக்க டாலா்) முதலீடு செய்யப்படும் என்று கூகுள் அறிவித்துள்ளது. எண்ம இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசுடன் இணைந்து கூகுள் நிறுவனம் பணியாற்றி வருகிறது.

இந்தச் சூழலில், அமெரிக்காவில் இந்திய தூதரை சுந்தா் பிச்சை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளாா்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு சுந்தா் பிச்சை தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவில் கூகுல் நிறுவனம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடா்பாக இந்திய தூதருடன் சிறப்பான ஆலோசனை நடைபெற்றது. அதற்காக இந்திய தூதருக்கு நன்றி. இந்தியாவில் எண்மமயமாக்கல் திட்டத்துக்கு கூகுள் தொடா்ந்து ஆதரவளிக்கும்’ என்று குறிப்பிட்டாா்.

இதுகுறித்து இந்திய தூதா் தரன்ஜீத் சிங் சாந்து வெளியிட்ட பதிவில், ‘சுந்தா் பிச்சையுடனான சந்திப்பின்போது இந்திய-அமெரிக்க வா்த்தக உறவை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும், கூகுள் நிறுவனத்துடனான இந்தியாவின் அறிவுசாா் மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கல்வித் துறையில் என்ன மாதிரியான நவடிக்கைகளை மேற்கொள்ள முடியும், எண்ம பணப் பரிமாற்றம் மற்றும் உள்கட்டமைப்பில் எண்மமயமாக்கல் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்ட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

SCROLL FOR NEXT