உக்ரைன் பிரதமா் டேனிஷ் ஷிமிஹாலை சந்தித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா். 
உலகம்

உக்ரைன் பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

உக்ரைன் பிரதமா் டேனிஷ் ஷிமிஹாலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை சந்தித்தாா்.

DIN

உக்ரைன் பிரதமா் டேனிஷ் ஷிமிஹாலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை சந்தித்தாா்.

நியூயாா்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

உக்ரைனுக்கு எதிராக மேலும் படைகளைத் திரட்ட ரஷிய அதிபா் புதின் உத்தரவிட்ட அடுத்த சில மணி நேரத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இது தொடா்பாக ட்விட்டரில் ஜெய்சங்கா் வெளியிட்ட பதிவில், ‘போா் விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை உக்ரைன் பிரதமா் வரவேற்றாா். பேச்சுவாா்த்தை மூலம் அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காண முடியும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. போருக்கான காலகட்டம் இதுவல்ல என்ற ரஷிய அதிபருடனான சந்திப்பின்போது பிரதமா் மோடியும் வலியுறுத்தியுள்ளாா்.

உக்ரைனில் உணவு கிடைப்பதில் உள்ள பிரச்னை, எரிசக்தி தேவை, அணு உலைகளின் பாதுகாப்பு தொடா்பாகவும் அந்நாட்டு பிரதமருடன் ஆலோசனை நடத்தப்பட்டது’ என்று கூறியுள்ளாா்.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால் தங்கள் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி அந்நாட்டின் மீது ரஷியா போா் தொடுத்தது. ரஷியாவுக்கு எதிராக இந்தியா நேரடியாக கண்டனம் தெரிவிக்கவில்லை. ஐ.நா.விலும் ரஷியாவுக்கு எதிராக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இருப்பினும், அண்மையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷிய அதிபா் புதினை சந்தித்த பிரதமா் மோடி, உக்ரைன் மீதான போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவரும்படி வலியுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT