உலகம்

ஊழல் வழக்கு: சீனாவின் முன்னாள் சட்ட அமைச்சருக்கு மரண தண்டனை

ANI

பெய்ஜிங்: ஊழல் வழக்கில், சீனாவின் முன்னாள் சட்ட அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உயர் அதிகாரியான ஃபு ஸெங்குவாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஊழல் புரிந்தது மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்டக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சீனா டெய்லி ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், ஜிலின் மாகாணத்துக்கு உள்பட்ட ஜாங்சூன் பகுதியில் அமைந்துள்ள மக்கள் நீதிமன்றம், இந்த வாக்கை விசாரித்து, முன்னாள் சட்ட அமைச்சருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது. 

முன்னதாக, ஃபு பெய்ஜிங் மாநகராட்சியின் பொது பாதுகாப்பு அதிகாரி, பொதுப் பாதுகாப்பு துணை அமைச்சர் மற்றும் சட்டத் துறை அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர்.

தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, தானோ தனது குடும்பத்தினர் மூலமாகவோ அவர் பல்வேறு ஊழல்களை செய்திருப்பதும் அதன் மூலம் லாபம் அடைந்திருப்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: 8 பேர் பலி | செய்திகள்: சிலவரிகளில் | 09.05.2024

ஆர்சிபி பேட்டிங்; மேக்ஸ்வெல் அணியில் இல்லை!

24 மணி நேரத்தில் 49 லட்சம் பேர் பார்த்த ‘மோடிக்கு ராகுல் பதிலடி’ விடியோ!

கால் முளைத்த கொன்றைப் பூ! அலேக்யா ஹரிகா..

குஜராத் பர்தம்பூரில் மறுவாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT