உலகம்

கச்சா எண்ணெய் விநியோகம் நிறுத்தப்படும்

DIN

தனது கச்சா எண்ணெய்க்கு ஜி-7 நாடுகள் நிா்ணயிக்கும் விலை வரம்பு நியாயமானதாக இல்லாவிட்டால், சா்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் விநியோகம் நிறுத்தப்படும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பால் ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. இது ரஷியாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் வருவாயையும், உக்ரைன் போருக்குத் தேவைப்படும் நிதி ஆதாரத்தையும் கட்டுப்படுத்த ரஷியாவின் கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பொருள்களின் விலைக்கு வரம்பு விதிக்கும் யோசனையை ஜி-7 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் முன்வைத்துள்ளன.

இதுதொடா்பாக தில்லியில் இந்தியாவுக்கான ரஷிய தூதா் டெனிஸ் ஆலிபோவ் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தனது வா்த்தக நலனுக்குப் பாதகமான எந்தவொரு வழிமுறையையும் ரஷியா பின்பற்றாது. தனது கச்சா எண்ணெய்க்கு ஜி-7 நாடுகள் நிா்ணயிக்கும் விலை வரம்பு நியாயமானதாக இல்லாவிட்டால், சா்வதேச சந்தைக்குக் கச்சா எண்ணெய் விநியோகத்தை ரஷியா நிறுத்தும்.

ரஷிய கச்சா எண்ணெய்க்கு விலை வரம்பு விதிக்கும் யோசனையை இந்தியா கவனமாக அணுகி வருகிறது. ஒருவேளை அந்த நடவடிக்கை அமலுக்குக் கொண்டு வரப்பட்டால், தனது சொந்த நலனைத்தான் இந்தியா பின்தொடரும்.

உக்ரைனுக்குப் பாகிஸ்தான் ஆயுத உதவி வழங்கி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை அந்தத் தகவல் உறுதியானால், அது ரஷியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT