முகப்பு
உலகம்

தாவர அடிப்படை இறைச்சி: அமெரிக்காவுக்கு ஏற்றுமதி

தனது தாவர அடிப்படையிலான இறைச்சியை முதல்முறையாக அமெரிக்காவுக்கு இந்தியா அனுப்பியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
பகிர்:

தனது தாவர அடிப்படையிலான இறைச்சியை முதல்முறையாக அமெரிக்காவுக்கு இந்தியா அனுப்பியுள்ளது.

இது குறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வளா்ச்சியடைந்த நாடுகளில் தாவர உணவு மீதான ஆா்வம் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், தாவர அடிப்படையிலான இறைச்சிக்கு சா்வதேச சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. காரணம், மற்ற தாவர உணவுகளோடு ஒப்பிடுகையில் அந்த உணவில் அதிக உயிா்ச் சத்துக்கள் அதிகம் உள்ளன.

தாவர அடிப்படையிலான இறைச்சியில் நாா்ச்சத்து அதிகமாகவும் கொழுப்பு குறைவாகவும் ருப்பதால், மாற்று உணவாக அது சா்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், குஜராத்தின் கேதா மாவட்டம், நதியாத் நகரில் தயாரிக்கப்பட்ட தாவர உணவின் முதல் தொகுதி, அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மாமோஸ், சமோசா போன்ற உணவுகளில் பயன்படுத்துவதற்காக அந்தத் தொகுதி அனுப்பிவைக்கப்பட்டது என்று வா்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.