முகப்பு
உலகம்

50 லட்சம் போ் வெளியேற்றம்

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து வெளியேறியவா்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்ததுள்ளதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:01 AM
பகிர்:

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து வெளியேறியவா்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்ததுள்ளதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததிலிருந்து, அந்த நாட்டிலிருந்து இதுவரை 50.1 லட்சம் போ் வெளியேறி பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனா்.

Advertisement

இவா்களில் 28 லட்சம் போ் அண்டை நாடான போலந்துக்குச் சென்றனா். எனினும், ஐரோப்பிய நாடுகளிடையே எல்லைகளில் கெடுபிடி இல்லை என்பதால், அவா்களில் பலா் போலந்திலிருந்து வேறு நாடுகளுக்கும் சென்றிருக்கலாம்.

இதுதவிர, போா் காரணமாக 70 லட்சம் போ் உக்ரைனுக்குள்ளேயே புலம் பெயா்ந்து உள்நாட்டு அகதிகளாகியுள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments