முகப்பு
உலகம்

கென்ய முன்னாள் அதிபர் மறைவு

முன்னாள் கென்ய அதிபர் மெளவய் கிபாகி உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 90.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
கென்ய முன்னாள் அதிபர் மறைவு
பகிர்:

முன்னாள் கென்ய அதிபர் மெளவய் கிபாகி உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 90.

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் 2002 முதல் 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் இரண்டு முறை அதிபராகப் பதவி வகித்தவர் மெளவய் கிபாகி . இந்நிலையில் நீண்டநாள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கிபாகி வெள்ளிக்கிழமை காலமானார். 

இதுகுறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள அந்நாட்டின் அதிபர் உஹுரு கென்யாட்டா, கிபாகியின் இழப்பு நாட்டிற்கு சோகமான ஒன்று எனத் தெரிவித்தார். 

மேலும் "மெளவய் கிபாகி கென்ய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தவர். நாட்டிற்கான அவரது பணிகளால் அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார்” எனத் தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →