முகப்பு
உலகம்

இலங்கை: பிரதமர் அலுவலகத்தில் ராணுவத்தினர் குவிப்பு

இலங்கை பிரதமர் மாளிகை மற்றும் அலுவலகத்தில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

இலங்கை பிரதமர் மாளிகை மற்றும் அலுவலகத்தில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிபர் அலுவலகம், அதிபர் மாளிகை, பிரதமர் மாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இலங்கை முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்து ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று தொலைக்காட்சி மூலம் பேசிய ரணில் விக்கிரமசிங்க  “ஜனநாயகத்திற்கு எதிரான ஃபாசிச அச்சுறுத்தலை நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அரசின் சொத்துக்களை அழிப்பதை அனுமதிக்க முடியாது. அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் மாளிகை திரும்ப வழங்கப்பட வேண்டும். நமது அரசியலமைப்பை கிழித்து எறியவிட முடியாது.

ஃபாசிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். சில முக்கிய அரசியல் தலைவர்கள் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிகிறது. ராணுவத் தளபதிகள் மற்றும் காவல்துறை தலைவருக்கு சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் பிரதமர் மாளிகை முன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பிற்காக அவருடைய அலுவலகத்தில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

தடையை மீறி உள்ளே வரும் போராட்டக்காரர்களை அடக்கும்பொருட்டு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களும், காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →