உக்ரைன் மேயரைக் கடத்தியது ரஷியப் படை
மெலிடோபோல் நகர மேயரை ரஷிய ராணுவத்தினர் கடத்திச் சென்றதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
மெலிடோபோல் நகர மேயரை ரஷிய ராணுவத்தினர் கடத்திச் சென்றதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் தொடர்ந்து 17-வது நாளாக ரஷியப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய ரஷியா தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
குறிப்பாக, தலைநகர் கீவை முழுமையாகக் கைப்பற்ற ரஷியத் தரைப்படைகள் முயன்று வருகின்றன.
இந்நிலையில், உக்ரைனின் மெலிடோபோல் நகர மேயர் இவான் பெடரோவை ரஷிய ராணுவத்தினர் கடத்தியதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி மற்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய அதிபர் ஸெலென்ஸ்கி ‘மெலிடோபோல் நகரை ரஷிய கைப்பற்றும் முயற்சியைத் தடுத்த அந்நகர மேயர் இவான் பெடரோவை ரஷிய ராணுவத்தினர் 10 பேர் கடத்திச் சென்றுள்ளனர். ரஷியா ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளைப் போல நடந்துகொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.