முகப்பு
உலகம்

பிலிப்பின்ஸில் எரிமலை சீற்றம்: மக்கள் வெளியேற்றம்

பிலிப்பின்ஸில் எரிமலையிலிருந்து கரும்புகை எழுந்ததையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பிலிப்பின்ஸில் எரிமலை சீற்றம்: மக்கள் வெளியேற்றம்
பகிர்:

பிலிப்பின்ஸில் எரிமலையிலிருந்து கரும்புகை எழுந்ததையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பிலிப்பின்ஸின் மனிலாவில் உள்ள டால் எரிமலையில் சனிக்கிழமை காலை 7 மணியளிவில் பலத்த சத்தத்துடன் கரும்புகை வெளியேறத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அம்மாகாண அரசு உத்தரவிட்டது.

எரிமலையிலிருந்து வெளியேறிய புகைமூட்டமானது 1500 மீட்டருக்கும் அதிகமாக மேலுழுந்தது. எரிமலை வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்ததைத் தொடர்ந்து 1200க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

டால் எரிமலை அடிக்கடி இவ்வாறு புகையை வெளியேற்றி வருவதால் அப்பகுதியில் மக்கள் வசிப்பதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பாக தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments