உலகம்

'கேக்' வடிவில் 'ரெஸ்யூம்'! வேலை தேடும் பெண்ணின் வித்தியாசமான முயற்சி

DIN


பிரபல காலணி நிறுவனத்தில் பணியில் சேருவதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், வித்தியாசமான முயற்சியில் தனது சுயவிவரக் குறிப்புகளை அனுப்பியுள்ளார். 

நிறுவனத்தில் பணியின் சேருவதற்காக, அனைவரும் காகிதத்தில் தங்களது சுய விவரக் குறிப்புகளை (ரெஸ்யூம்) அனுப்பும் நிலையில், தனித்து தெரியவேண்டும் என்பதற்காக கேக் வடிவில் தனது சுயவிவரக் குறிப்புகளை அப்பெண் அனுப்பியுள்ளார். 

பலமுறை முயன்றும் பணி கிடைக்காததால், வித்தியாசமான முறையை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

தென்கிழக்கு அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த கார்லி பாவ்லினாக் பிளாக்பர்ன் (Karly Pavlinac Blackburn) எனும் பெண், நைக் (Nike) நிறுவனத்தில் பணியில் சேருவதற்காக பலமுறை தனது சுயவிவரக் குறிப்பை அனுப்பியுள்ளார். எனினும் பணி கிடைக்கவில்லை. இதனால் தனது தோழியின் ஆலோசனையின்படி வித்தியாசமான முறையில் பணி தேட முடிவெடுத்துள்ளார். 

இறுதியில், தனது சுய விவரக் குறிப்புகளை கேக் மீது எழுதி 'நைக்' நிறுவனத்திற்கு கார்லி அனுப்பிவைத்துள்ளார். நைக்  நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியின்போது அந்த கேக் வந்து சேர்ந்துள்ளது. இதனை கார்லி திட்டமிட்டே செய்தார். இதன் புகைப்படத்தை அவர் சமூகவலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். 

இது குறித்து கார்லி குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நைக் நிறுவனத்திற்கு எனது சுயவிவரக் குறிப்புகளை கேக் வடிவில் அனுப்பிவைத்தேன். அவர்கள் தற்போது எந்தவொரு நபருக்கும் பணி வழங்குவதற்கு தயாராக இல்லை. எனினும் அவர்களுக்கு நான் யார் என்பதை நிரூபித்தாக வேண்டும். அவர்களுடைய அலுவலக நிகழ்ச்சியின்போது கேக் வடிவில் சுயவிவரக் குறிப்புகளை அனுப்புவதை விட சிறந்த வழி எனக்குத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. சிலர் அப்பெண்ணின் வித்தியாசமான முயற்சியை பாராட்டியும் வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

இயக்குநர் சேரன் மகள் திருமணம் - புகைப்படங்கள்

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

மயங்கிவிழுந்தார் நிதின் கட்கரி!

திருமண நாள் கொண்டாட்டத்தில் அஜித் - ஷாலினி!

SCROLL FOR NEXT