உலகம்

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

DIN

வெலிங்டன் (நியூசிலாந்து): நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அது ரிக்டா் அளவுகோலில் 7.2 அலகுகளாகப் பதிவானது.

நியூசிலாந்தில் உள்ள கெர்மாடெக் தீவுகள் பகுதியில் இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 6.11 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆககப் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்தது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள், உயிர்சேதங்கள் குறித்த தகவல் உடனடியாகக் கிடைக்கவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணைய சூதாட்டத்துக்கு தடை பெறுவது அவசியம்: ராமதாஸ்

யானைகள் வழித்தட திட்ட அறிக்கையை தமிழில் வெளியிட ஓபிஎஸ் கோரிக்கை

பாஜக வென்றால் 22 கோடீஸ்வரா்களே நாட்டை ஆள்வா்- ஒடிஸாவில் ராகுல் பிரசாரம்

கடலோர வாழ்வாதார சங்கத்தை மூடக் கூடாது: அண்ணாமலை

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது: ‘நியூஸ்கிளிக்’ நிறுவனரை விடுவித்தது உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT