கோப்புப் படம். 
உலகம்

வங்கதேசத்தில் கப்பலுடன் படகு மோதியதில் 8 பேர் பலி

வங்கதேசத்தில் மணல் ஏற்றிய கப்பலுடன் படகு மோதியதில் 8 பேர் பலியாகினர்.  

DIN

வங்கதேசத்தில் மணல் ஏற்றிய கப்பலுடன் படகு மோதியதில் 8 பேர் பலியாகினர். 

தலைநகர் டாக்காவில் இருந்து 30 கி.மீ தொலைவில் பத்மா நதியின் கிளை நதியில் 46 பேருடன் நேற்றிரவு சென்ற படகு ஒன்று மணல் ஏற்றிய கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் மோதியவுடனே படகு கவிழ்ந்தது.

படகு ஆற்றங்கரைக்கு அருகில் மூழ்கியதால், பெரும்பாலான பயணிகள் நீந்தி கரையை அடைந்தனர். 

மேலும் நான்கு பேர் மீட்கப்பட்டதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். லூஹாஜங் தீயணைப்பு சேவை நிலைய அதிகாரி குயிஸ் அகமது தெரிவித்ததாவது, இதுவரை, நாங்கள் எட்டு பேரின் உடல்களை மீட்டுள்ளோம். 

அவர்களில் நான்கு பேரின் உடல்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒரு குழந்தை உட்பட இரண்டு உடல்கள் ஆற்றங்கரையில் உள்ளன என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

SCROLL FOR NEXT