தெற்கு சோமாலியாவில் உள்ள லேயார் ஷபெல்லே பகுதியில் சாலையோர வெடிகுண்டு வெடித்ததில் மினி பேருந்தில் சென்றுகொண்டிருந்த 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகினர். 12 பேர் காயமடைந்தனர்.
லோயர் ஷபெல்லேவின் ஆளுநர் மொஹமத் இப்ராஹிம் கூறுகையில்,
மினி பேருந்து மார்கா நகரிலிருந்து புறப்பட்டு கொரியோலி நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியின் மீது மினி பேருந்து சென்றதால் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
கண்ணிவெடி தாக்குதலுக்கு அல்-ஷபாப் அமைப்பு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பவத்திற்கு எந்த குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.