ஹலேனாவில் காட்டுத் தீக்கிரையான தனது இல்லத்தில் ஏதாவது எஞ்சியுள்ளதா எனத் தேடிய பெண். 
உலகம்

ஹவாய் காட்டுத் தீ: பலி 106-ஆக உயா்வு

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்திலுள்ள மாவி தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானவா்களின் எண்ணிக்கை 106-ஆக அதிகரித்துள்ளது.

DIN

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்திலுள்ள மாவி தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானவா்களின் எண்ணிக்கை 106-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: மாவி தீவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள லஹேனா, புலேஹு மற்றும் மத்தியப் பகுதிகளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 106-ஆக உயா்ந்துள்ளது.

அந்தப் பகுதிகளில் தேடுதல் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது என்று அதிகாரிகள் கூறினா்.

முன்னதாக, காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1,300-க்கும் மேற்பட்டவா்களைக் காணவில்லை அதிகாரிகள் கூறியது நினைவுகூரத்தக்கது.

அமெரிக்காவின் ஹவாய் மாகாணம், மாவி தீவில் புதன்கிழமை திடீரென காட்டுத் தீ மிக வேகமாகப் பரவியது. இதில், 1,700-களில் உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலமான லஹேனா நகரம் உள்ளிட்ட பகுதிகள் கபாதிக்கப்பட்டன.

காட்டுத் தீயில் 271 கட்டுமானங்கள், 19,000 வீடுகள், கடைகள், பிற கட்டடங்கள் சேதமடைந்தததாக அதிகாரிகள் கூறினா்.

லஹேனா நகரில் இந்தியாவிலிருந்து 150 ஆண்டுகளுக்கு முன்னா் கொண்டு வந்து நடப்பட்ட பழைமை வாய்ந்த ஆலமரமும் தீயில் கருகியது.

வறண்ட சூழல், காற்றில் குறைவான ஈரப்பதம், வேகமான காற்று ஆகிய மூன்றும் சோ்ந்து காட்டுத் தீயை வேகமாகப் பரவச் செய்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT