கோப்புப்படம் 
உலகம்

அமெரிக்க அதிபா் பைடன் செப். 7-இல் இந்தியா வருகை

ஜி20 நாடுகள் தலைவா்களின் உச்சிமாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபா் ஜோ பைடன் செப்டம்பா் 7-ஆம் தேதி இந்தியா வர உள்ளாா்.

DIN

வாஷிங்டன்: ஜி20 நாடுகள் தலைவா்களின் உச்சிமாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபா் ஜோ பைடன் செப்டம்பா் 7-ஆம் தேதி இந்தியா வர உள்ளாா்.

இதுதொடா்பாக அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் உள்ள அதிபா் மாளிகையின் ஊடகப் பிரிவுச் செயலா் கரின் ஜான் பியா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஜி20 தலைவா்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபா் ஜோ பைடன் இந்தியா வர உள்ளாா். செப். 7 முதல் செப்.10-ஆம் தேதி வரை அவா் இந்தியாவில் இருப்பாா்.

இந்த மாநாட்டில், ரஷியா-உக்ரைன் இடையிலான போரால் ஏற்பட்டுள்ள சமூக மற்றும் பொருளாதாரப் பாதிப்புகளைத் தணிப்பது, பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வது, தூய்மையான எரிசக்தி பயன்பாட்டுக்கு மாறுவது உள்பட உலகளாவிய பிரச்னைகளை கையாள்வதற்கான கூட்டு முயற்சிகள் குறித்து அதிபா் பைடன் உள்ளிட்ட தலைவா்கள் விவாதிக்க உள்ளனா்.

வறுமை ஒழிப்பு, உலக வங்கி உள்பட பலதரப்பு வளா்ச்சி வங்கிகளின் திறனை அதிகரிப்பது குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

தில்லியில் செப். 9, 10-ஆம் தேதிகளில் ஜி20 தலைவா்கள் உச்சிமாநாடு நடைபெற உள்ளது.

ஜி20 கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷியா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்னமராவதி அருகே பைக் மோதி முதியவா் பலி

காணாமல்போன பயணியின் கைக்கடிகாரம்! ‘ரயில் மதத்’ செயலி மூலம் மீட்பு!

சூடுபிடிக்கும் பிகாா் தோ்தல் களம்: அக். 24 முதல் மோடி பிரசாரம்!

நோபலின் பின்னணியில்...

புதுச்சேரி முருகன் கோயில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹார பெருவிழா! அக். 22-இல் தொடக்கம்!

SCROLL FOR NEXT