கிரீஸின் ஏஜியன் கடலில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
சமோஸ் தீவில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணித்த பெண் மற்றும் குழந்தை பலியாகினர். மேலும் 35 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
இதேபோன்று மற்றொரு படகு லெஸ்வோஸ் தீவில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்றபோது கடலில் மூழ்கியது. இதில் 11 மாதக் குழந்தை, 8 வயது சிறுமி, உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். 18 பேர் மீட்கப்பட்டனர்.
ஏஜியன் கடலில் நாளொன்றுக்கு 150 - 200 பேர் வருகை தருகின்றனர். ஆகஸ்ட் 1 மற்றும் 20-வரை சுமார் 1,172 அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடலில் மீட்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.