உலகம்

யூத எதிர்ப்புக்கு எலான் மஸ்க் ஆதரவு? எக்ஸ்-ல் விளம்பரங்களை நிறுத்திய நிறுவனங்கள்!

DIN

டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க், எக்ஸ் தளத்தில் யூதர்களுக்கு எதிரான கருத்தை ஆதரித்ததற்குப் பின்னர் பிரபல நிறுவனங்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் விளம்பரங்களை நிறுத்தியுள்ளன. 

எக்ஸ் தளத்தில் ஒருவர் பதிவிட்ட 'யூதர்கள் வெள்ளையர்களை வெறுக்கிறார்கள்' என்ற கருத்தை ஆதரிக்கும் வகையில் "முற்றிலும் உண்மை" என எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். இதனை விரும்பாத ஆப்பிள், டிஸ்னி, ஐபிஎம், லயன்ஸ்கேட், என்பிசி யூனிவர்சல், பாராமவுன்ட், வார்னர் புரோஸ் போன்ற நிறுவனங்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் விளம்பரங்களை நிறுத்தியுள்ளனர்.  

’தி நியூ யார்க் டைம்ஸ்’ நிறுவனம் நடத்திய உச்சி மாநாட்டில் பேசிய டிஸ்னி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாப் ஐகர், தங்கள் விளம்பரங்களை எக்ஸ் தளத்தில் நிறுத்திக்கொள்வதற்கான காரணமாக எலான் மஸ்க்கின் அந்தப் பதிவைக் குறிப்பிட்டார். அதன்பின், பேசிய எலான் மஸ்க் தனது எக்ஸ் நிறுவனத்தோடு விளம்பரங்களை நிறுத்திக்கொண்ட அனைத்து நிறுவனங்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும், எக்ஸ் நிறுவனம் வீழ்ந்தால் அதற்கு விளம்பரங்களை நிறுத்திக்கொண்டுள்ள இந்த நிறுவனங்கள்தான் காரணம் என்பதை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது எனக் கூறினார். மேலும் யூத எதிர்ப்புப் பதிவிற்கு பதிலளித்தது நான் செய்த முட்டாள் தனம் எனவும் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரைக் கைப்பற்றியது வங்கதேசம்

70% நிதியை சிறுபான்மையினருக்கு செலவிட்டாா் சோனியா -அமித் ஷா குற்றச்சாட்டு

மாநில வில்வித்தை போட்டி: வேலூா் மாணவருக்கு வெண்கலம்

வேளாங்கண்ணி-சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் தகுதி பெற்றாா் அமன்

SCROLL FOR NEXT