கோப்புப்படம். 
உலகம்

பள்ளிக்குத் துப்பாக்கியுடன் வந்த சிறுமி: ஒருவர் பலி, 5 பேர் காயம்!

ரஷியாவில் பள்ளிக்கு துப்பாக்கியுடன் சென்ற சிறுமி தன் சக மாணவர்களை சுட்டதில், ஒருவர் பலியாகியுள்ளார்.

DIN

ரஷியாவில் பள்ளிக்குத் துப்பாக்கியுடன் சென்ற சிறுமி தன் சக மாணவர்களை சுட்டுவிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். 
 
காயமடைந்த குழந்தைகளில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 14 வயது சிறுமியிடம் எப்படி துப்பாக்கி வந்தது என்பது குறித்து சிறுமியின் தந்தையிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ரஷியாவில் கல்வி நிறுவனங்களில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த 2022-ல் மட்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பரில் இரண்டு துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் இரண்டு குழந்தைகள் மற்றும் 17 பேர் கொல்லப்பட்டனர், 24 பேர் காயமடைந்தனர். 

2018 மற்றும் 2021-ல் பள்ளிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் மொத்தம் 29 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT