உலகம்

காஸா விவகாரம்: அபூா்வ சட்டப் பிரிவைக் கையிலெடுத்த குட்டெரெஸ்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக, மிகவும் அபூா்வமாகப் பயன்படுத்தப்படும் ஐ.நா.வின் 99-ஆவது சட்டப் பிரிவை பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கையிலெடுத்துள்ளாா்.

DIN

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக, மிகவும் அபூா்வமாகப் பயன்படுத்தப்படும் ஐ.நா.வின் 99-ஆவது சட்டப் பிரிவை பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கையிலெடுத்துள்ளாா்.

அந்தச் சட்டப்பிரிவின் கீழ், சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக ஐ.நா. பொதுச் செயலா்கள் கருதும் எந்தவொரு விவகாரத்தையும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கவனதுக்கு அவா்களால் கொண்டு வர முடியும்.இது குறித்து குட்டெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காஸாவில் மனிதாபிமான போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறேன். இது அவசியமானது மட்டுமின்றி அவசரமான தேவையும் ஆகும்.காஸாவில் எந்தப் பகுதியும் பாதுகாப்பானது இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே இந்த விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கவனத்துக்கு அவசரமாகக் கொண்டு வருகிறேன்’ என்றாா்.குட்டெரெஸின் செய்தித் தொடா்பாளா் ஸ்டீஃபன் துஜாரிக் கூறுகையில், ‘காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்காக ஐ.நா.வின் 99-ஆவது சட்டப்பிரிவை பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கையிலெடுத்துள்ளது வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு’ என்றாா்.ஐ.நா. பொதுச் செயலா்கள் இந்தப் பிரிவைப் பயன்படுத்தி ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் கவனத்தை ஈா்ப்படு மிகவும் அபூா்வமானதாகும்.இதற்கு முன்னா் கடந்த 1971-ஆம் ஆண்டில் அப்போதைய ஐ.நா. பொதுச் செயலா் யு தான்ட்தான் இந்தப் பிரிவைப் பயன்படுத்தினாா். அப்போது நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போா் விவகாரத்தை பாதுகாப்பு கவுன்சிலின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக இந்த சட்டப்பிரிவை அவா் பயன்படுத்தினாா்.அந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்று, கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பகுதி வங்கதேசமாக உருவெடுத்தது நினைவுகூரத்தக்கது.... குட்டெரெஸ் கட்டவுட் படம் போடவும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT