ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கேய் லாவ்ரோவ் 
உலகம்

அக்.7 தாக்குதலை இஸ்ரேல் பயன்படுத்திக் கொள்கிறது: ரஷியா

இஸ்ரேல் அக்.7 தாக்குதலைப் பயன்படுத்தி காஸா மீதான கடும் தாக்குதல்களை நியாயப்படுத்த முயல்வதாக ரஷிய அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். 

DIN

இஸ்ரேல் அக்டோபர் 7 தாக்குதலைக் காரணமாகக் கூறி  பாலஸ்தீனமக்களைக் கொன்றுவருவதை நியாயப்படுத்த முயல்வதாக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்கேய் லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேல், காஸா மீது நடத்திவரும் தொடர் தாக்குதல்களுக்கு தன் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். 

ஹமாஸ், இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல் புதிதாக முளைத்த பிரச்னையால் நடந்தது அல்ல, பல ஆண்டுகளாக பாலஸ்தீன மக்களுக்கு அளிக்கப்பட்ட பொய்யான வாக்குறுதிகளே இந்தத் தாக்குதலுக்குக் கரணமாக அமைந்துள்ளது என லாவ்ரோவ் தெரிவித்தார். இஸ்ரேல், பாலஸ்தீனம் என இரண்டு அங்கீகரிக்கப்பட்ட, பாதுகாப்பான மற்றும் அமைதியான நாடுகள் உருவாக்கித் தரப்படாததே இந்தப் போருக்குக் காரணம் எனவும் தெரிவித்தார்.

மேலும், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான பிரெச்னைக்கு மாஸ்கோ மத்தியஸ்தராக செயல்படலாம் எனவும் தெரிவித்தார். உடனடி போர் நிறுத்தத்திற்கான ஐநாவின் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்களித்ததற்கு மாஸ்கோ கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ரஷிய பிரதமர் விலாதிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஐநாவில் இஸ்ரேலுக்கு எதிரான மாஸ்கோவின் நிலைப்பாடு அதிருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். 

மேலும், இஸ்ரேலின் பிரதமர் அலுவலம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலில் நடந்த தாக்குதல் வேறு எந்த நாட்டில் நடந்திருந்தாலும், இதைத்தான் அனைவரும் செய்திருப்பார்கள் என பிரதமர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நள்ளிரவில் முழுமையாகத் தெரியும் சந்திர கிரகணம்! அடுத்து 2028-இல்தான்!

இயற்கையும் மனித உளவியலும்...

கம்பனின் தமிழமுதம் - 61: நடக்க வேண்டியதே நடக்கும்!

ஆன்மிகச் சொற்பொழிவாளர் பாரதி!

திருமணமும் மரணமும்...

SCROLL FOR NEXT