இஸ்ரேல் இராணுவம் 
உலகம்

ஹமாஸ் சரணடைய அழைப்பு விடுத்த இஸ்ரேல் பிரதமர்!

காஸாவில் தாக்குதல்கள் வலுத்துள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பு சரணடைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.

DIN

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களாக ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றுள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பை சரணடைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.

'போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் ஹமாஸ் அமைப்பின் அழிவு துவங்கிவிட்டது. இது பாலஸ்தீன இஸ்லாமிய அமைப்புகளின் முடிவு. எல்லாம் முடிந்துவிட்டது, உங்கள் தலைவன் சின்வாருக்காக நீங்கள் உயிரை விட வேண்டாம். சரண்டைந்துவிடுங்கள்' எனத் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

சில ஹமாஸ் தீவிரவாதிகள் சரணடைந்துள்ளதாக நெதன்யாகு தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் இராணுவம் அதற்கான எந்த சான்றையும் வெளியிடவில்லை. ஹமாஸ் அமைப்பு யாரும் சரண்டையவில்லை எனத் தெரிவித்துள்ளது. 

இதுவரை 17,700-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை இஸ்ரேல் இராணுவம் கொன்று குவித்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட கோயில்களை தரைமட்டமாக்கியுள்ளது. பள்ளிகள், மருத்துவமனைகளில் தாக்குதல் நடத்தியுள்ளது. 

இவற்றுக்கு நடுவில், ஐநாவின் போர் நிறுத்தத்திற்கான எந்த முயற்சியும் வெற்றியைத் தரவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் கனவுகளின் பெண்ணாகும் கடின உழைப்பில்... கீர்த்தி ஷெட்டி!

சின்ன ரோல் மாதிரி தோன்றுகிறதா?... சோனு தாக்குர்!

கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறினேன், சான்று... துஷாரா விஜயன்!

இரவுக்கு ஆயிரம் கண்கள்... ஸ்ரேயா கல்ரா!

குரூப் 4 தேர்வு: காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு!

SCROLL FOR NEXT