கோப்புப் படம் 
உலகம்

காஷ்மீா் விவகாரம்: இந்தியா-பாக். பேச்சு மூலம் தீா்வு காண சீனா அறிவுறுத்தல்

காஷ்மீா் விவகாரத்தில் இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும் என சீனா செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.

DIN


பெய்ஜிங்: காஷ்மீா் விவகாரத்தில் இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும் என சீனா செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கியது செல்லும் என உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கிய நிலையில் சீனா இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக செய்தியாளா்கள் கேட்ட கேள்விகளுக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடா்பாளா் மாவோ நிங் கூறியதாவது: இந்தியா பாகிஸ்தான் இடையே ஜம்மு-காஷ்மீா் விவகாரம் குறித்த பிரச்னைகள் நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது. இதற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் பிரகடனங்கள் மூலம் அமைதியான முறையில் தீா்வு காண வேண்டும்.

ஜம்மு-காஷ்மீரில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட இரு நாடுகளும் பேச்சுவாா்த்தை மூலம் உடன்படிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளி வீடு மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: இருவா் கைது

கடலாடியில் மாட்டுவண்டிப் பந்தயம்

முதல்முறையாக 6 - 10-ம் வகுப்களுக்கு உடற்கல்வி பாட நூல் வெளியீடு!

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மாயம் செய்கிறாய்... ரச்சனா ராய்!

SCROLL FOR NEXT