உலகம்

இரண்டு ரயில்கள் மோதல், 515 பேர் படுகாயம்!

DIN

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் இரண்டு சுரங்கப்பாதை ரயில்கள் மோதிக்கொண்டதில் 515 பேர் படுகாயமடைந்துள்ளனர். 102 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த வியாழக்கிழமை நடந்த இந்த விபத்துக்கு, கடுமையான பனியினால் ரயில் தடங்கள் வழுக்குவதே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழுக்கும் தடங்களால் முன்னால் சென்ற ரயிலின் தானியங்கி பிரேக் தூண்டப்பட்டுள்ளது. இதனால் பின்னால் வந்த ரயிலும் வழுக்கும் தடங்களில் நிற்க முடியாமல் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவப் பணியாளர்கள், காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த புதன் கிழமையிலிருந்து பெய்யும் கடுமையான பனியால் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கடுமையான பனியால் சீனாவில் -7 டிகிரி செல்சியல் அளவில் வெப்பநிலை நிலவுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்மாவை ஆகாயம் சந்தித்த இடத்தில்... ரகுல் பிரீத்...

மீனம்

ஆர்எஸ்எஸ்-ல் இருந்து வந்தேன்; மீண்டும் செல்லத் தயார்: ஓய்வுபெறும் நீதிபதி

கும்பம்

மகரம்

SCROLL FOR NEXT