இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சோர்க் (நடுவில்) 
உலகம்

'இரு நாடுகள்' தீர்வைப் பற்றி பேச இது நேரமில்லை : இஸ்ரேல்! 

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான பிரச்னையை இரு நாடுகள் தீர்வு மூலம் முடிக்க இது நேரமில்லை என இஸ்ரேல் அதிபர் தெரிவித்துள்ளார். 

DIN

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் மூன்று மாதங்களாக தொடர்ந்து வரும் நிலையில் 'இரு நாடு' தீர்வினைப் பற்றி பேச இது நேரமில்லை என இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சார்க் தெரிவித்துள்ளார். 

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான பல ஆண்டுகாலப் பிரச்னையைத் தீர்க்க, இரு நாடுகளை உருவாக்கும் முடிவினை எதிர்க்கும் இஸ்ரேல் அதிகாரிகளின் வரிசையில் ஐசக் ஹெர்சார்க் இணைந்துள்ளார். 

மேலும், இஸ்ரேல் இன்னும் அக்டோபர் 7 தாக்குதலில் இருந்தே மீழவில்லை. மக்கள் அனைவரும் பயத்தில் உள்ளனர். மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கென தனி நாடு உருவாக்கித் தருவது தொடர்பாக பேச முடியாது எனக் கூறியுள்ளார். 

இஸ்ரேல் ஜனாதிபதி, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடனான சந்திப்பிற்கு முன் இதைத் தெரிவித்துள்ளார். ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம், போர் முடிந்த பின் இரு நாடுகளை உருவாக்குவது குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சோர்க் இஸ்ரேல் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கட்சி இரு நாடுகளை உருவாக்கும் தீர்வை ஆதரித்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காசிதா்மம் தவச்சாலையில் நூல் வெளியீட்டு விழா

தென்காசியில் எஸ்ஐஆா் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

நிழற்குடைக்கு அனுமதி கோரி அமைச்சரிடம் மனு

அரியப்பபுரம் அரசுப் பள்ளி வில்லுப்பாட்டில் சிறப்பிடம்

ஆய்க்குடியில் ரூ.33.59 லட்சம் நலத்திட்ட உதவிகள்

SCROLL FOR NEXT