உலகம்

நிலவில் கட்டுமானங்கள், செவ்வாயில் நகரங்கள்!: எலான் மஸ்க்

DIN

டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் (Space X) நிறுவனர் எலான் மஸ்க், நிலவில் கட்டாயம் கட்டுமானங்களை எழுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மனிதர்களுக்கென சொந்தமாக ஒரு தளம் நிலவில் கண்டிப்பாக வேண்டும் எனக் கூறியுள்ளார். 

மேலும், நிலவில் மனிதன் கால் வைத்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன் பின் நிலவில் மனிதனின் கால்தடம் படவேயில்லை என்பது ஏமாற்றமும் வருத்தமும் அளிக்கிறது எனத் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும், 1903 ஆம் ஆண்டில் ரைட் சகோதரர்கள் வானில் செலுத்திய முதல் விமானத்தின் காணொலியுடன் தனது கருத்தைப் பகிர்ந்த அவர், நிலவில் மனிதர்களுக்கென தளமும், செவ்வாயில் நகரங்களும் உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இஸ்ரேலின் புதிய ஆயுதம்!

பொதுவாக எலான் மஸ்க் தன் எக்ஸ் தளத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டால் அது அவரது அடுத்த திட்டத்தைச் சார்ந்ததாகவே இருக்கும். இப்போது அவர் இப்படி பதிவிட்டிருப்பது வலைதளத்தில் எலான் மஸ்க்கின் அடுத்த அறிவிப்பின் மீதான ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கரைத் தொடா்ந்து பெலிக்ஸ் ஜெரால்டும் கைது

பத்தாம் வகுப்புத் தோ்வு குப்பத்தேவன் அரசுப் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

கரூரில் ரயில் நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

கடும் வெயில்: டிஎன்பிஎல் தொழிலாளி மயங்கிச் சாவு

SCROLL FOR NEXT