முகப்பு
உலகம்

காஸா: தொடரும் இஸ்ரேல் தாக்குதல்!

இஸ்ரேல் காஸா மீது தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. உலகளவில் பல நாடுகள் போர் நிறுத்தம் குறித்து முன்னெடுத்தபோதும் அமெரிக்காவின் ஆதரவில் இஸ்ரேலின் போர் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.

Updated On : 19 டிசம்பர், 2023 at 3:41 PM
இஸ்ரேல் ராணுவம் | AP
பகிர்:

தெற்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 28 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் ராணுவம் வடக்கு பகுதியில் செயல்பாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சோதனை மேற்கொண்டது.

அக்.7 அன்று ஹமாஸ் தாக்குதலில் தொடங்கிய போர், இஸ்ரேல் தரைவழி, வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

யேமனைச் சேர்ந்த ஈரானிய ஹவுதி பயங்கரவாதிகளால் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் மிகப்பெரும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் முக்கிய நீர்வழிப் பாதையில் செல்லக் கூடிய தங்கள் கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளன. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் பதில் தாக்குதலை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தாக்குதலில் பலியான பாலஸ்தீனர் | AP

ராஃபா எல்லையில் இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சடமைந்திருந்த கட்டிடத்தின்மீது நடத்தப்பட்ட இஸ்ரேல் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 25 பேர் பலியாகியுள்ளனர்.

காஸாவின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. கணிசமான பொதுமக்கள் இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்து வருகின்றனர்.

உலகளவில் பல நாடுகள் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை முன்னெடுத்தபோதும் அமெரிக்காவின் ஆதரவில் இஸ்ரேலின் போர் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.