பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் 
உலகம்

பிரதமரின் நடிப்பு...வைரலாகும் விடியோ!

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நாடே விடுமுறையில் இருக்கும்போது பிரதமரின் இந்த விடியோ வெளியானது.

DIN

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பிரதமர் இல்லத்தில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தனியாக இருப்பதுபோல நடித்துள்ள விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

லண்டனில் எண் 10, டவுனிங் தெருவில் உள்ள பிரிட்டன் பிரதமருக்கான இல்லத்தில் இந்த விடியோ படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது.

1990-ல் வெளியான  ‘ஹோம் அலோன்’ படத்தின் காட்சிகள் போலவே பிரதமர் நடிக்கும் விடியோ பலரது வரவேற்பையும் பெற்று வருகிறது.

”நான் மட்டும் தான் இங்கு இருக்கிறேனா” என அவர் கேட்டுவிட்டு வீட்டில் தனியாக இருக்கும்போது சிறுவர்கள் செய்வதுபோல விளையாடத் தொடங்கிவிடுகிறார்.

அந்த விடியோ இறுதியில், வரவேற்பறைக்கு வருகிற அழைப்பை ரிஷி எடுத்து “ஹாரி உங்களுக்குத் தவறான எண் கிடைத்துள்ளது” எனப் பேசுவதோடு அந்த விடியோ முடிகிறது.

ஹாரி கோல், லண்டனின் சன் செய்தி நிறுவனத்தின் அரசியல் பிரிவு ஆசிரியர், சுனக்கின் அலைபேசி எண்ணை அவர் வெளியிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதனைக் குறிப்பிடும் வகையில் இதில் ஹாரி பெயரைப் பிரதமர் சொல்வதாக சமூக வலைதளங்களில் கருத்து நிலவுகிறது.

கிறிஸ்துமஸ் நாளன்று இரவு இந்த விடியோ ரிஷி சுனக்கின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாய்ப்புகள் தேடிவரும் விருச்சிக ராசிக்கு: தினப்பலன்கள்!

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

SCROLL FOR NEXT