ஆர்ஜென்டீனா அதிபர் ஜேவியர் மிலேய் 
உலகம்

பிரிக்ஸில் இணைய மறுத்த ஆர்ஜென்டீனா: காரணம் இதுதான்!

பிரிக்ஸ் கூட்டணி நாடுகளின் புதிய கூட்டணி சேர்ப்புக்கான அழைப்பை மறுத்துள்ளார் ஆர்ஜென்டீனா பிரதமர்.

DIN

ஆர்ஜென்டீனா பிரதமர் ஜேவியர் மிலேய், பிரிக்ஸ் கூட்டணி நாடுகள் அனுப்பிய கூட்டணியில் இணைவதற்கான அழைப்பை மறுத்துள்ளார். அக்கூட்டணியின் தலைவர்களுக்குத் தங்கள் நாட்டின் நிலைப்பாட்டைக் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் கூட்டணி- பிரேசில், ரஷிyaa, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கியது. மேற்குலக வணிக நாடுகளை எதிர்கொள்ள கூட்டணியைப் பலப்படுத்துநோக்கில் இன்னும் 6 நாடுகளுக்குக் கூட்டணியில் இணைவதற்கான அழைப்பை ஆகஸ்டில் தலைவர்கள் விடுத்திருந்தனர்.

ஆர்ஜென்டீனா, எத்தியோப்பியா, ஈரான், செளதி அரேபியா, எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் உறுப்பினர் தகுதி ஜன.1, 2024 முதல் அமலுக்கு வருமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்போது அந்த அழைப்பை ஆர்ஜென்டீனா மறுத்துள்ளது. இது குறித்து,  ‘இதனை உரிய நேரமாகத் தங்கள் நாடு கருதவில்லை’ என ஜேவியர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரவாதக் கட்சியைச் சேர்ந்த மிலேய், ஏற்கெனவே கோலோச்சி வந்த பாரம்பரிய கட்சிகளைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்தார்.

பிரிக்ஸில் இணைவதில்லை என்பதை பிரசாரத்திலேயே தனது நிலைப்பாடாகக் குறிப்பிட்டார்.

புவிசார் அரசியல் என்பது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடன் பொருந்துவதே தவிர, கம்யூனிஸ்ட் கூட்டணியோடு அல்ல என்பதே மிலேயின் தரப்பு.

சீனா மற்றும் பிரேசில் நாடுகளோடு வியாபார உறவுகளைத் துண்டித்து கொள்ளவிருப்பதாகச் சொல்லியிருந்தாலும் ஆட்சிக்கு வந்தபிறகு சமரச போக்கைக் கடைபிடித்து வருகிறார், மிலேய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

அம்பிகாவதியின் ஆன்மா சிதைந்துவிட்டது: தனுஷ்

VinFast நிறுவனத்தின் முதல் காரில் கையெழுத்திட்ட முதல்வர் Stalin

விவசாய நிதி 20வது தவணை விடுவிப்பு: கேஒய்சி பூர்த்தி செய்ய மோடி வலியுறுத்தல்!

விழுப்புரம்: ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஏலத்தில் பங்கேற்ற வியாபாரிகள்

SCROLL FOR NEXT