முகப்பு
உலகம்

துருக்கியில் 4,800 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,800-ஐ கடந்துள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:27 AM
பகிர்:

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,800-ஐ கடந்துள்ளது. 

துருக்கி மற்றும் சிரியா எல்லையில் பிப்.6-ம் தேதி அதிகாலை 7.8 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 4,890 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த நிலநடுக்கத்தால் இரு நாடுகளின் எல்லைப் பகுதி நகரங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கானோரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தில் 11 ஆயிரம் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், சம்பவ இடத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →