வெள்ளம் சூழ்ந்த வடமேற்கு சிரியா 
உலகம்

நிலநடுக்கத்தால் உடைந்த அணை! இடிபாடுகளுக்கு மத்தியில் வெள்ளத்தில் மிதக்கும் சிரியா!!

சிரியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளில் வடமேற்கு பகுதியிலிருந்த அணை உடைந்ததால் அப்பகுதியிலுள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

DIN


சிரியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளில் வடமேற்கு பகுதியிலிருந்த அணை உடைந்ததால் அப்பகுதியிலுள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

துருக்கி எல்லையிலுள்ள ஒரேண்டஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நதியின் அணை உடைந்ததால், சிரியாவின் அல்-துலுல் என்ற கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

சிரியாவின் இட்லிப் மாகாணத்திலுள்ள பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏற்கெனவே கடும் குளிரில் இடிபாடுகளுக்கு மத்தியில் அந்நாட்டு மக்கள் அவதியுற்று வரும் நிலையில், தற்போது சிரியாவின் வடமேற்கு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

இதனால், இப்பகுதிகளிலுள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள மேடான பகுதிகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

ஒரேண்டஸ் நதியால் சிரியா - துருக்கி எல்லைப் பகுதிகளிலுள்ள மக்கள்பயன்பெற்று வந்த நிலையில், வரலாற்றி முதன் முறையாக நிலநடுக்கத்தால், நதியின் வெள்ளம் கிராமப் பகுதிக்குள் புகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் மகுடம் சூடிய ஜெர்மனி: 8-ஆவது முறையாக சாம்பியன்!

சீனாவில் குடியிருப்புக் கட்டடத்தில் பயங்கர தீ! 12 பேர் பலி!

தமிழக டிஜிபி (பொறுப்பு) தற்காலிகமாக மாற்றம்..!

பட்டியல் சமூகத்தினர் வீட்டில் சாப்பிட்ட நபரை ஊரைவிட்டு ஒதுக்கிய அவலம்! அதிகாரிகள் விசாரணை!

200 முறை வெளிநடப்பு செய்தாலும்... எதிர்க்கட்சியை விமர்சித்த அமித் ஷா பேச்சு!

SCROLL FOR NEXT