நைஜீரியாவில் போராட்டக்களமாகும் வங்கிகள் 
உலகம்

நைஜீரியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை; போராட்டக்களமாகும் வங்கிகள்

நைஜீரியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், அந்நாட்டு மக்கள் கையில் பணமில்லாமல் திண்டாடி வருகிறார்கள்.

DIN


நைஜீரியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், அந்நாட்டு மக்கள் கையில் பணமில்லாமல் திண்டாடி வருகிறார்கள். பல வங்கிகளில், தங்கள் கணக்குகளில் இருக்கும் பணத்தை எடுக்க நீண்ட வரிசைகளும் வன்முறைகளும் நடந்தேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நைஜீரியாவில் புழக்கத்தில் இருந்த பழைய நைரா (ரூபாய்) நோட்டுகளை எல்லாம் மாற்றுவதற்கு பிப்ரவரி 20ஆம் தேதி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பல வங்கிகளில் கூட்டம் அலைமோதுவது தொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

சில வங்கிகளில் ஒரு நபருக்கு அதிகபட்சமாக 20 ஆயிரம் நைரா மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் வன்முறையும் வெடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நைஜீரிய மத்திய வங்கியானது புழக்கத்தில் இருந்த 200, 500 மற்றும் 1000 நைரா நோட்டுகளை புழக்கத்தில் இருந்து அகற்றுவதாக அறிவித்தது. அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள கடைசி நாளாக 2023ஆம் ஆண்டு ஜனவரி 31ம் தேதியை அறிவித்திருந்தது. பிறகு அது பிப்ரவரி 20 ஆக நட்டிக்கப்பட்டது.

எனினும், போதுமான அளவில் புதிய நைரா நோட்டுகளை வங்கிகளால் புழக்கத்துக்கக் கொண்டு வர முடியவில்லை. இதனால் மக்களிடையே பணப்புழக்கம் இல்லாமல் வீதிக்கு இறங்கி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மக்களிடையே வன்முறை வெடித்தாலும் இந்த நடவடிக்கையில் பின்வாங்கப் போவதில்லை என்று அந்நாட்டு அதிபர் அறிவித்துவிட்டார்.

இந்த நிலையில், வங்கிகளில் மக்கள் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வங்கிகளை தாக்குவது, சாலைகளில் மறியலில் ஈடுபடுவது உள்ளிட்ட போராட்டங்களும் வலுத்து வருகின்றன.

பலருக்கும் இந்த மாத துவக்கத்தில் வந்த ஊதியத்தைக் கூட வங்கியிலிருந்து எடுக்க முடியாமல் அல்லாடுவதாகவும், மருத்துவச் செலவுக்குக் கூட கையில் காசில்லாமல் அவதிப்படுவதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நாங்கள் கடன் கேட்கவில்லை. எங்கள் பணத்தைக் கேட்கிறோம் என்று வங்கிகளில் வாக்குவாதத்தில் ஈடுபடும் மக்களையும் பார்க்க முடிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள்! ராஜ்நாத் சிங்

அஜித்துக்கு வில்லனாகும் பிரபலம்?

இந்து அறநிலையத் துறையில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

ஹரியாணாவில் வாக்குத் திருட்டு ஆதாரமற்றது, நாட்டை அவமதிக்கும் முயற்சி: பாஜக

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

SCROLL FOR NEXT