முகப்பு
உலகம்

மியான்மா் சுதந்திர தினம்: 7,012 பேருக்கு பொதுமன்னிப்பு

பிரிட்டனிலிருந்து மியான்மா் விடுதலை பெற்ன் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி, 7,012 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக அந்த நாட்டின் ராணுவ ஆட்சியாளா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:38 PM
பகிர்:

பிரிட்டனிலிருந்து மியான்மா் விடுதலை பெற்ன் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி, 7,012 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக அந்த நாட்டின் ராணுவ ஆட்சியாளா் மின் ஆங் லியாங்  புதன்கிழமை அறிவித்தாா்.

மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் ஜனநாயக முறைப்படி தோ்தல் நடத்தப்படும் என்று சுதந்திர தின உரையின்போது அவா் வாக்குறுதி அளித்தாா்.

மியான்மரில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. எனினும், அந்தத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி அவரது ஆட்சியை ராணுவம் கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி கலைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.