உலகம்

நாசாவின் அப்பல்லோ 7 விண்வெளிப் பயணத்தின் கடைசி விண்வெளி வீரரும் காலமானார்!

DIN

நாசாவின் முதல் வெற்றிகரமான புகழ்பெற்ற அப்பல்லோ 7 விண்வெளிப் பயணத்தின் கடைசி முன்னாள் விண்வெளி வீரர் வால்டர் கன்னிங்ஹாம்(90) செவ்வாய்கிழமை அதிகாலை ஹூஸ்டனில் காலமானார்.

1968 ஆம் ஆண்டு அப்பல்லோ 7 விண்கலத்தில் சென்ற அமெரிக்க விமானப்படை மேஜர் டான் எஃப் ஐசெல் மற்றும் அமெரிக்க கடற்படை கேப்டன் வால்டர் எம்.ஷிரா ஆகிய இரண்டு பேரும் ஏற்கனவே இறந்துவிட்டனர். 

இந்நிலையில், வயதுமூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக, அப்பல்லோ 7 விண்வெளிப் பயணத்தின் கடைசி விண்வெளி வீரர் வால்டர் கன்னிங்ஹாம்(90) காலமானார்.

அவரது மரணத்தை நாசா செய்தித் தொடர்பாளர் பாப் ஜேக்கப்ஸ் உறுதிப்படுத்தினார். அவர் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 3) காலமானார் என்று அவரது மனைவி டாட் கன்னிங்ஹாம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார், ஆனால், மரணத்திற்கான காரணத்தைக் குறிப்பிடவில்லை.

அப்பல்லோ 7 விண்வெளியை நோக்கி ஒரு அற்புதமான படியாக இருந்தது, இது சந்திரனில் தரையிறங்குவதற்கு வழிவகுத்தது. 

1968 ஆம் ஆண்டு அப்போலோ 7 விண்கல பயணத்தில் இருந்த மூன்று விண்வெளி வீரர்களில் ஒருவராக கன்னிங்ஹாம் இருந்தார்.

அப்பல்லோ 8 பயணத்தின் போது விண்வெளி நிறுவனம் அடுத்த குழுவினரை அனுப்பும் வகையில், மூன்று விண்வெளி வீரர்களும் ஒரு சரியான பயணத்தை மேற்கொண்டதாக நாசா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அப்பல்லோ 7 விண்கல பயணத்தில், வால்ட் மற்றும் அவரது பணியாளர்கள் சரித்திரம் படைத்தனர், இன்று நாம் காணும் ஆர்ட்டெமிஸ் தலைமுறைக்கு வழி வகுத்தனர்," என்று நாசா நிர்வாகி பில் நெல்சன் கூறினார். "நமது நாட்டின் விண்வெளித் திட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பை நாசா எப்போதும் நினைவுகூறும் மற்றும் கன்னிங்ஹாம் குடும்பத்திற்கு  எங்களின் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்." என்று கூறியுள்ளார்.

"வால்ட் கன்னிங்ஹாம் ஒரு போர் விமானி, இயற்பியலாளர் மற்றும் ஒரு தொழிலதிபர். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஒரு ஆய்வாளர்" என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா: இன்று தொடக்கம்

டெங்கு விழிப்புணா்வு தினம் கடைப்பிடிப்பு

மழை விளையாடியது: பிளே-ஆஃபில் ஹைதராபாத்

SCROLL FOR NEXT