உலகம்

20 கோடிக்கும் அதிகமான ட்விட்டர் தரவுகள் திருட்டு: எலான் மஸ்க் என்ன சொல்கிறார்? 

DIN


பாதுகாப்பை மீறி 20 கோடி ட்விட்டர் பயனாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்களை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளதாக ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ள தரவுகளில் விராட் கோலி, சல்மான் கான் மற்றும் பிற பிரபலங்கள் அடங்குவர். ஹேக் செய்துள்ள தகவல்களை ஹேக்கர் குழுமத்தில் மர்மநபர்கள் வெளியிட்டுள்ளனர்.  இந்த தகவல் வெளியானதை அடுத்து, ட்விட்டர் பயனாளர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். 

ட்விட்டர் பயனாளர்களின் தனியுரிமை குறித்து பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் பெரிய அளவில் வெளிப்படுத்தியுள்ளார். 

அதில், புதியதாகக் கூறப்படும் தரவுத் (ஹேக்) திருட்டில், ட்விட்டரில் 20 கோடிக்கும் அதிகமான பயனாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள் ஹேக்கர் குழுமத்தில் ஹேக்கர்கள் (மர்மநபர்கள்) வெளியிட்டுள்ளனர். 

திருடப்பட்ட தரவுகளில் பத்து லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்கள் தங்கள் ட்விட்டர் கணக்குகளை உருவாக்குவதற்காக உள்ளிட்ட மின்னஞ்சல் முகவரிகள் உள்ளன. 

ஹேக்கர் குழுமத்தில் ஹேக்கர்கள் வெளியிட்டுள்ளதாக கூறப்படும் தரவின் ஸ்கிரீன்ஷாட் பல பிரபலங்களின் பெயர்கள் மற்றும் திரையுலக நடிகர்கள் இடம் பெற்றிருப்பதாக இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். 

அதாவது, நட்சத்திர விளையாட்டு வீரர்களான விராட் கோலி, வீரேந்திர சேவாக் மற்றும் பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், அக்‌ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன், அனுஷ்கா ஷர்மா போன்ற இந்திய பிரபலங்களின் பெயர்கள் உள்பட பல முக்கிய நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

"உங்கள் சேவைக்கு நன்றி குழப்பத்திற்காக காத்திருக்க முடியாது" என்ற வாசகங்களுடன் சில பயனார்களின் தரவுத்தளத்தில் காட்டப்படுவதாக அது கூறப்பட்டுள்ளது.

தரவுகள் திருடப்பட்டதாக கூறப்படும் தரவுகள் குறித்து இன்னும் சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை. இத்தகைய தரவு கசிவுகள் பெரும்பாலும் போலியான, பழைய அல்லது நகல் தரவுகளை உள்ளடக்கியதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 

இந்த தகவல் வெளியானதை அடுத்து, ட்விட்டர் பயனாளர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். தற்போது, ஹேக்கர்கள் குறித்த எந்த தகவலும் பெறப்படவில்லை. இந்த தரவுகள் எப்போது ஹேக் செய்யப்பட்டது என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.

தரவுகளை திருடிய ஹேக்கர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அவர்களின் இருப்பிடம் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ட்விட்டர் பயனாளர்களின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த விவகாரத்தில் தற்போது வரை ட்விட்டர் நிர்வாகம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே, எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தப்படுவதற்கு முன்னர் இந்தத் தரவுகள் திருடப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT