உலகம்

கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 66.93 கோடியாக அதிகரிப்பு!

DIN



ஜெனீவா: உலக அளவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.93 கோடியாக அதிகரித்துள்ளது. 

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கரோனா நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கரோனா தொற்று 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

கரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து கரோனா நோய்த்தொற்று தொடர்ந்து பரவி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,93,82,961-ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 2,17,72,112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 64,08,92,962 குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், உலகம் அளவில் கரோனா தொற்று பாதித்தவர்களில் இதுவரை 67,17,887 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT