கோப்புப் படம் 
உலகம்

இலங்கையில் பயணிகள் ரயில் மோதி 3 யானைகள் பலி: இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு!

இலங்கையில் கொழும்பு-மட்டக்களப்பு வழியாக சென்று பயணிகள் ரயில் மோதியதில் 3 யானைகள் பலியாகின. ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு நிலவியது.

DIN


இலங்கையில் கொழும்பு-மட்டக்களப்பு வழியாக சென்று பயணிகள் ரயில் மோதியதில் 3 யானைகள் பலியாகின. ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு நிலவியது.

இலங்கை கொழும்பு - மட்டக்களப்பு இடையேயான ரயில் தடத்தில் வெள்ளிக்கிழமை பயணிகள் ரயில் அதிகாலை 2 மணியளவில் வந்துகொண்டிருந்தது. அப்போது ரயில் தடத்தில் குறுக்கே வந்த யானைகள் மீது ரயில் மோதியது. இதில், 3 யானைகள் சம்பவ இடத்திலேயே பலியானது. மேலும், பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது. 

அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் கொழும்பு-மட்டக்களப்பு இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  ரயில்வே பணியாளர்கள் ரயில் பாதையை சரி செய்யும் பணியில் ஊடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT