உலகம்

நேபாளத்தில் ஓடுபாதையில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து!

நேபாளத்தில் ஓடுபாதையில் பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

DIN


காத்மாண்ட்: நேபாளத்தில் ஓடுபாதையில் பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்ட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பொக்ரா சென்ற எட்டி ஏர்லைன்ஸ் விமானம் 68 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் செல்லும்போது விழுந்து விபத்துக்குள்ளானது.  

இதில், விமானம் முழுவதும் தீப்பிடித்து தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. 

விமானத்தில் இருந்து 68 பயணிகள், நான்கு விமான ஊழியர்கள் என 72 பேரின் நிலைமை கவலைக்குரியதாகவும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

SCROLL FOR NEXT