உலகம்

நேபாள விமான விபத்து: கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

DIN

ஞாயிற்றுக்கிழமை பொக்ரா விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டிகள் இரண்டையும் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.

கருப்புப் பெட்டிகள் நேபாள விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் (CAAN) ஒப்படைக்கப்பட்டுள்ளன. காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மற்றும் விமான தரவு ரெக்கார்டர் மூலம் கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகளை எடுக்க முடியும். மேலும், விபத்துக்கான காரணத்தையும் கருப்புப் பெட்டியைக் கொண்டு கண்டுபிடிக்க முடியும்.

நேபாள தலைநகர் காத்மண்டுலிருந்து 72 பேருடன் பொக்காரா சென்ற விமானம் நேற்று(ஜன.16) திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. சேதி நதிப் பள்ளத்தாக்கில் விமானம் விழுந்து நொருங்கியதில் 5 இந்தியர்கள் உள்பட 68 பேர் பலியாகினர்.

விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த ஐந்து இந்தியர்கள் அபிசேக் குஷ்வாஹா, பிஷால் சர்மா, அனில் குமார் ராஜ்பர், சோனு ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சயா ஜெய்ஸ்வால் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக எட்டி ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT