நேபாள மலைப் பகுதியில் நொறுங்கிக் கிடந்த விமான பாகங்கள். 
உலகம்

நேபாளத்தில் விமான விபத்து: இன்று அரசு துக்கம் அனுசரிப்பு

நேபாளத்தில் விமான விபத்தில் 67 பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து இன்று அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

DIN

நேபாளத்தில் விமான விபத்தில் 67 பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து இன்று அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்ட எட்டி ஏர்லைன்ஸின் 9N-ANC ATR-72 விமானம் பொக்ரா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதால் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 67 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

விமானத்தில் இருந்த 10 வெளிநாட்டவர்களில் ஐந்து இந்தியர்கள் அடங்குவதாக இந்திய தூதரகம் ட்விட் செய்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த ஐந்து இந்தியர்கள் அபிசேக் குஷ்வாஹா, பிஷால் சர்மா, அனில் குமார் ராஜ்பர், சோனு ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சயா ஜெய்ஸ்வால் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக எட்டி ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நேபாளத்தில் இன்று ஒருநாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரக்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு| செய்திகள்: சிலவரிகளில் |7.10.25

உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக 178 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்!

4 மாநிலங்களில் ரூ. 24,634 கோடியிலான ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜக எம்.பி.யை சந்தித்து நலம் விசாரித்த மமதா!

மயிலியர்றளர் பொல்கி... மடோனா!

SCROLL FOR NEXT