உலகம்

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து: 39 பேர் பலி!

பலுசிஸ்தானின் லாஸ்பேலா மாவட்டத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் 39 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIN

பாகிஸ்தான்: பலுசிஸ்தானின் லாஸ்பேலா மாவட்டத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் 39 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவெட்டாவிலிருந்து கராச்சிக்கு கிட்டத்தட்ட 48 பயணிகளுடன் பேருந்து  அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் லாஸ்பேலா அருகே பேருந்து திரும்பும் போது பாலத்தின் தூணில் மோதி, பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்தது.

ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண் உள்பட மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எனினும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், விபத்து நடந்த இடத்தில் இருந்து இதுவரை 17 உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT