உலகம்

ஐஸ்லாந்தில் 24 மணி நேரத்தில் 2,200 முறை நிலநடுக்கம்!

ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்ஜாவிக் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,200 முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. 

DIN

ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்ஜாவிக் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,200 முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. 

இதில் 7 நிலநடுக்கங்கள் லேசான நிலநடுக்கமாக கருதப்பட்டு, ரிக்டர் அளவில் 4-ஆக பதிவானது. நில அதிர்வு நடவடிக்கையின் விளைவாக விமான எச்சரிக்கை பச்சை நிறத்திலிருந்து ஆரஞ்சு ஆக மாற்றப்பட்டது.

எரிமலை வெடிப்பு ஏற்படலாம் என்பதற்கான அறிகுறி இதுவென்று ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில் ஐஸ்லாந்தின் தென்மேற்கு பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், அங்கு மேலும் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிர் உலகக் கோப்பை: 129 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

காந்தி சிலைக்கு காவித்துண்டு: புதிய சர்ச்சை!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு: ஆந்திர முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து!

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் திருத்தேர் வைபவம்!

முதல் டெஸ்ட்: கே.எல்.ராகுல் அரைசதம்; வலுவான நிலையில் இந்தியா!

SCROLL FOR NEXT