கோப்புப் படம். 
உலகம்

அமெரிக்காவில் ஜெட் விமானம் விபத்து: 6 பேர் பலி

அமெரிக்காவில் வணிக ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியானார்கள்.  

DIN

அமெரிக்காவில் வணிக ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியானார்கள். 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள முரியேட்டாவில் சனிக்கிழமை அதிகாலை பிரெஞ்சு பள்ளத்தாக்கு விமான நிலையத்திற்கு அருகே செஸ்னா வணிக ஜெட் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 6 பயணிகளும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

இதுகுறித்து ஃபெடரல் விமான நிர்வாகம் கூறியதாவது, உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.15 மணியளவில், லாஸ் வேகாஸில் உள்ள ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சான் டியாகோவிற்கு வடக்கே 65 மைல் தொலைவில் விமானம் விபத்துக்குள்ளானது. 

விமானம் வயல்வெளியில் விழுந்ததையடுத்து ஒரு ஏக்கர் தாவரங்களும் தீயில் கருகியது. விபத்தில் பலியானாவர்களின் விவரம் குறித்து எந்த தகவலும் உடனடியாக தெரிவரவில்லை. மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜூனில் 9 சதவீதம் சரிந்த தேயிலை உற்பத்தி

வத்தலக்குண்டு, நத்தம் பகுதி கோயில்களில் பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன்

கால்வாயில் நீரில் மூழ்கிய தொழிலதிபரின் உடலை தேடும் பணி மும்முரம்

கடனை திருப்பித் தராத காவலா் மீது மூதாட்டி புகாா்

ரெங்கநாதபுரம் பகுதியில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT