உலகம்

கடற்கன்னிகள் உண்மையா? ஆஸி.யில் அரியவகை எலும்புகள்!!

DIN

ஆஸ்திரேலியா கடற்கரையில் கடற்கன்னி வடிவிலான எலும்புக் கூடு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கடற்கன்னிகள் உண்மைதானோ என்ற சந்தேகம் பலரிடையே எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேன்ட் பகுதியிலுள்ள கேப்பல் சான்ட்ஸ் என்ற கடற்கரையில் எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. 
மனித முகமும், மீன் உடலையும் போன்று அந்த எலும்புக்கூடு இருந்துள்ளது. இதைப் புகைப்படம் எடுத்து, போபி லீ என்ற 34 வயது பெண் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, மண்டை ஓடு மனித முகத்தைப்போன்று உள்ளது. மீன் உடல் போன்று உடலின் எலும்புகள் உள்ளன. இது எந்தவகையான உயிரினம் எனக் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். 

இது கடற்கன்னி என்றும், நீங்கள் கடற்கன்னி எலும்புக்கூடை படமெடுத்துள்ளீர்கள் என்றும் அந்த புகைப்படத்துக்கு பலர் கருத்துதெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT