உலகம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

DIN

இந்தோனேசியாவில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:

வடக்கு மலுக்கு மாகாணம், சனானா நகருக்கு 85 கி.மீ. வடகிழக்கே, கடல் பகுதியில் வியாழக்கிழமை மதியம் 12.31 மணிக்கு (உள்ளூா் நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 5.1 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினா்.

27 கோடி மக்கள்தொகையைக் கொண்ட இந்தோனேசிய தீவுக் கூட்டம், புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது. எனவே அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

அங்கு கடந்த 2004-இல் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து உருவான சுனாமியில் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த சுமாா் 2.3 லட்சம் போ் பலியானது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT