(கோப்புப்படம்) 
உலகம்

பிலிப்பின்ஸில் பயணிகள் படகு கவிழ்ந்து 30 பேர் பலி!

பிலிப்பின்ஸின் தலைநகருக்கு அருகிலுள்ள ஏரியில் படகு கவிழ்ந்ததில் 30 பேர் பலியானதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

DIN

பிலிப்பின்ஸின் தலைநகருக்கு அருகிலுள்ள ஏரியில் படகு கவிழ்ந்ததில் 30 பேர் பலியானதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பினன்ஹொன் நகரிலிருந்து ஏரி வழியாக தலிம் துவிற்கு பயணிகள் படகு பயணம் மேற்கொண்ட நிலையில், படகில் 70 பயணிகள் பயணித்தனர். இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

ரியில் படகு சென்றுகொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பயணிகள் அனைவரும் படகின் ஒரே பக்கத்திற்கு வந்ததால் எடை அதிகரித்தது. இந்நிலையில் நிலை தடுமாறிய படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில், படகில் பயணித்த அனைவரும் ஏரியில் மூழ்கினர். விபத்து குறித்து தகவலறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

படகில் பயணித்த பயணிகள் யாரும் கவச உடை அணியவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். 30 பேர் பலியான நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT